பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலி!
விபத்து
சேலத்தில் பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்தார்.
சேலம் இரும்பாலை கீதா நகர் அனேக்ஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்று காலை 9 மணியளவில் சேலம் நோக்கி டூவீலரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து இவரது டூவீலர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story