கடலூர் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

கடலூர் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு

காவல் நிலையம் 

கடலூர் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்துள்ள பாா்வதிபுரம் கணபதி நகா் விரிவாக்கம் பகுதியை சோ்ந்த ராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் நெய்வேலி வட்டம் 2 பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு என்எல்சி மக்கள் தொடா்பு அலுவலகம் எதிரில் உள்ள பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்தாா்.

அப்போது பேருந்துக்காக சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி வேன் மோதியதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து வேன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி நகரிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story