ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே குடும்ப பிரச்சனையால் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஊத்துமலை கிராமத்தைச் சேர்ந்த அன்னப்பாண்டி என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைக் குறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story