சேலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
சேலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழனிவேலு தலைமை தாங்கினார். அன்பழகன், குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 103 மாத டி.ஏ. உயர்வை உடனே வழங்க வேண்டும். 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும். இதர துறைகளை போல மருத்துவ காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story