குழந்தைகள் கடத்தல் வழக்கில் மீண்டும் விசாரணை !
விசாரணை
குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மருத்துவர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் விசாரணை.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் அனுராதா புரோக்கர்கள் மூலம் குழந்தைகளை விற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம்15ஆம் தேதி மருத்துவர் அனுராதா மற்றும் பெண் புரோக்கர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த மருத்துவர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் திருச்செங்கோட்டில் சீல் வைக்கப்பட்ட மருத்துவர் அனுராதாவுக்கு சொந்தமான இடங்களில் சீலை அகற்றி உள்ளே இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
Next Story