வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ப‌ல்வேறு கோரிக்கை நிறைவேற்றக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், இளநிலை, முதுநிலைருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித் திருத்த ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 22ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் தொடங்கியது. இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையை வருவாய்த்துறை வெளியிட்ட நிலையில், மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரக் கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதியில் மாலைமுதல் தொடர்காத்திருப்புப் போராட்டத்தில்ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலர் முருகன், மாநிலப் பொதுச் செயலர் சங்கரலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story