தனியார் பள்ளிகளின் 549 வாகனங்களை வருவாய்த் துறை அலுவலர்கள் ஆய்வு

தனியார் பள்ளிகளின் 549 வாகனங்களை வருவாய்த் துறை அலுவலர்கள் ஆய்வு

வாகனங்கள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் 549 வாகனங்களை வருவாய்த் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆயுதப்படை திடலில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் தலைமையில், வருவாய்க் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்று ஆய்வு செய்தனர்.

மாணவர்கள் ஏறுவதற்கு ஒரு வழி, இறங்குவதற்கு ஒரு வழி, அவசரக் காலத்தில் வெளியேறுவதற்கு வழி ஆகியன சரியாக உள்ளனவா, வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், தீயணைப்பான்,சிசிடிவி கேமராக்கள், முதலுதவிப் பெட்டகம் போன்றவை உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான வாகனங்களின் உரிமங்கள் சரி பார்க்கப்பட்டு, தகுதிச் சான்றுகள் வழங்கப்பட்டதாகவும், குறைகள் இருந்த ஓரிரண்டு வாகனங்களை சரிசெய்து மீண்டும் கொண்டுவர அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story