செய்யூர் எம்எல்ஏவை கண்டித்து வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் முன்னிலையில் பெண் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தரக்குறைவாக பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு கண்டித்து அலுவலக நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் தாலுகாவில் கடந்த 16 -ஆம் தேதி வருவாய்த்துறை தீர்ப்பாயம் எனும் ஜமாபந்தி தொடங்கி அக்டோபர் 27 -ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜமா பந்தியின் நிறைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு பங்கேற்றார். அப்பொழுது,ஒரு பெண்மணிக்கு வாரிசு சான்றிதழ் தருவதற்கான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என சட்டமன்ற உறுப்பினர் கேட்டார்.
அப்போது வருவாய் ஆய்வாளர் முழு விசாரணை செய்ததில் வாரிசு சான்றிதழ் தர முடியாது என கூறியுள்ளார்.இதனால் வருவாய் துறையினருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பாபுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த பெண்மணிக்கு வாரிசு சான்றிதழ் தர வருவாய் துறையினர் லஞ்சம் கேட்டதாகவும் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு பேசியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்பொழுது ஆர்ப்பாட்டத்தினர் குறுகியில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் மிக விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என கூறினார்கள் இதில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள்,அலுவலக பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.