கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையினர் போராட்டம்
கள்ளக்குறிச்சியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் காதர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் வடிவேலன் வரவேற்றார்.
லோக்சபா தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதியை உடனடியாக ஒதுக்குதல், வருவாய்த்துறையில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களை கழிவு செய்து, புதிய வாகனங்களை வழங்குதல், 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல், அனைத்து தாலுக்காக்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்துதல் உட்பட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.