10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வருவாய் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக காத்திருப்பு போராட்டம்
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் , சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையாக நிதி ஒதுக்கீட்டினை செய்ய வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து வட்டாட்சியர் விஜயகாந்த் தலைமையில், அனைத்து அரசு வருவாய் துறையினர் பணிகளை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசுப் பணிகள் பாதிப்படைந்துள்ளது. இதுகுறித்து தனி வட்டாட்சியர் சந்திரா கூறும் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த் துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் எனக் கூறினார் இந்த போராட்டத்தில் வட்டாட்சியர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு வலு சேர்த்தனர்

Tags

Next Story