பண்ணை வீட்டில் வருமானத்துறை அதிகாரி சோதனை
சங்கரன்கோவில் அருகே பண்ணை வீட்டில் வருமானத்துறை அதிகாரி சோதனை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் கஸ்தூரிரெங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக தலைவர் பத்மநாபன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென தூத்துக்குடி மாவட்ட வருமானவரித்துறை அதிகாரி ஜான் ஜெபத்துரை , தென்காசி மாவட்ட வருமான வரித்துறை அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் காவல் துறையினரோடு இணைந்து அவரது வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக சோதனையானது நடைபெற்று வரும் நிலையில் சோதனைக்கு பின்னர் முழு தகவல்களும் தெரியவரும் என கூறினர். இந்த பகுதியானது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி என்பதாலும் ஆனால் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை என்பது தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதால் 3 மாவட்ட அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அவைத்தலைவர் பத்மநாபன் வீட்டில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. வருமானவரித்துறையினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
Next Story