வருவாய்துறை அலுவலர்கள் தொடர் வேலை நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3வது நாளாக வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வருவாய் துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான, பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துபுதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், , மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினை சார்பில், பிப்ரவரி 27ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் வேப்பந்தட்டை , வேப்பூர், ஆலத்தூர், ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து பிப்ரவரி 29ம் தேதி 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து, கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story