ராமநாதபுரம் வருவாய் அலுவலர்கள் போராட்டம்

ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக வருவாய்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி துவங்கி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் இன்று இரவு துவங்கே அந்தந்த மாவட்ட தலைவர்கள் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இரவு பகல் என தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

தங்களது கோரிக்கை குறித்து அரசு செவி சாய்க்காத பட்சத்தில் எதிர்வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக மாவட்ட தலைவர் பழனி தெரிவித்துள்ளார். போராட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் வருவாய்த்துறை ஊழியர்களின் இந்த போராட்டத்தால் அன்றாட அரசு பணிகளை செய்ய முற்படும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்

Tags

Next Story