சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டனர் 

சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சேலத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முழு நிதியை ஒதுக்க வேண்டும். சிறப்பு திட்டங்களில் பணி நெருக்கடி அளிப்பதை தவிர்த்து, திட்டப்பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் காத்திப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றும் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். மாநிலத்துணைத்தலைவர் அர்த்தனாரி கலந்து கொண்டு பேசினார். இந்த போராட்டத்தின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story