தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் நீதிகேட்டு போராட்டம் வட்ட தலைவர் திருஞானசம்பந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த நீதிகேட்டு போராட்டத்தில் 90 வருவாய்கிராம ஊழியர்களும் பங்கேற்று வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம், கருணை அடிப்படையில் வாரிசுதாரருக்கு வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு எரிபொருள் படி 2500, பொங்கல் போனஸ் 3000 வழங்குதல்,வருவாய் கிராம ஊரில் இருந்து டி-பிரிவில் சேர்ப்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் மாவட்ட தலைவர் சங்கர், வட்ட செயலாளர்கள் வெங்கடேசன், பொருளாளர் ஏழுமலை, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் அண்ணாதுரை உட்பட செங்கம் வட்ட கிளை மற்றும் உள்வட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags
Next Story