சேந்தமங்கலத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
சேந்தமங்கலத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினா்
சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். பணியின் போது கிராம உதவியாளர் இறந்துவிட்டால் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கவேண்டும். மாற்றுதிறனாளிகளாக இருக்கும் கிராம உதவியாளர்களுக்கு எரி பொருள்படி ரூ.2500 வழங்க வேண்டம். கிராம உதவியாளர்களின் கால முறை ஊதியம் டி பிரிவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சேந்தமங்கலம் வட்ட தலைவர் சாமுவேல், செயலாளர் சிதம்பரம், பொருளாளர் அன்பு, துணைத்தலைவர் செல்வம், பாலமுருகன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.