வெடிபொருள் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ஆய்வுக்கூட்டம்
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் வெடிபொருள் தயாரிப்பு மற்றும் கிடங்குகள் (படிவம்-20)-ல் விபத்துகள் ஏற்படா வண்ணம் செயல்பட, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வெடிபொருள் தயாரிப்பு உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்ககள் பட்டாசு தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி அவர்கள் தலைமையில்நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் வெடிபொருள் தயாரிப்பு மற்றும் கிடங்குகள் (படிவம்-20)-ல் விபத்துகள் ஏற்படா வண்ணம் செயல்பட, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து வெடிபொருள் தயாரிப்பு உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் பட்டாசு தொழிற்சாலைகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, காவல்துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்புத்துறை சார்பில், மேற்படி வெடிபொருள் உற்பத்தி கிடங்கில் விபத்துகள் ஏற்படாதவண்ணம் அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளின்படி கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தீயணைப்பு கருவிகளின் பயன்பாடு குறித்து நேரடி செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும், மேற்படி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களும் அளிக்கப்பட்டது. மேற்காணும் துறைகளின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை வரும் 31.10.2023க்குள் நிவர்த்தி செய்ய உரிமதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இம்மாவட்டத்தில் வெடிவிபத்துகள் நிகழாவண்ணமும், உயிரிழப்புகள் ஏற்படாவண்ணமும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீ. வெற்றிவேல், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ், காவல் துணை கண்காணிப்பாளர் (கிராமியம்) முருகன், துணை இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், பிரேம்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.