வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம் - அதிகாரிகள் பங்கேற்பு

வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம் - அதிகாரிகள் பங்கேற்பு

ஆய்வு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 22 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர் வெங்கடாசலம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜனவரி 22 ஆம் தேதி ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது.

மேலும், ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினவிழா நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கபட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கபட்டுள்ள வாக்குபதிவு இயந்திர செயல்விளக்க மையத்தினை, வாக்காளர் பட்டியலுக்கான மேற்பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டனர். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story