வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு !!

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு !!

கற்பகம்

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியருமான கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகளை பார்வையிட்ட பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் வாக்கு எண்ணுவதற்கு அமைக்கப்பட்டுள்ள மேசைகள், ஒவ்வொரு மேசையிலும் நடைபெறும் நிகழ்வுகளை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வாக்கு எண்ணிக்கையினை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் எழுத பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் விரிவாக கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story