ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புகுழு மையத்தினை ஆய்வு

ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புகுழு மையத்தினை ஆய்வு

ஊடக சான்றளிப்பு

திருப்பூரில் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, மாவட்ட தேர்தல் அலுவலர் கிறிஸ்துராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மையத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூரில் பாராளுமன்ற பொது தேர்தல் -2024 நடைபெறுவதை முன்னிட்டு 18- திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சுகுப்தா, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார், சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story