வேளாண்மை இணை இயக்குநர் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணிகள் ஆய்வு

வேளாண்மை இணை இயக்குநர் அவர்களின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணிகள் ஆய்வு செய்யார்.

கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலர் வேளாண்மை இணை இயக்குநர் அவர்களின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணிகள் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தளி, பர்கூர் மற்றும் வேப்பனப்பள்ளி வட்டாரங்களில் 16203 எக்டர் பரப்பளவில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப்பணிகள் 5 ஆண்டு திட்டப் பணிகளாக 2021-2022 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பர்கூர் மற்றும் மத்தூர் வட்டாரங்களில் 9 பஞ்சாயத்துகளில் 12 Micro Watershed களுக்கு ரூ.1214.84 இலட்சங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டப்பணிகளில் விவசாயிகள், சுய உதவிகுழுக்கள் மற்றும் பயனாளி குழுக்களுக்கு பயிற்சியும், வேளாண்மை உற்பத்தி திட்டப் பணிகளில் தார்பாலின், விசைதெளிப்பான், மின்கல தெளிப்பான், தீவனப்புல் நறுக்கும் கருவிகள், தோட்டக்கலை மரக்கன்றுகள், வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் வினியோகம், வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த செயல் விளக்க திடல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நுழைவு கட்டப்பணிகளில் கதிரடிக்கும் களங்கள் அமைத்தல், சிறிய தொட்டியுடன் கூடிய குடிநீர் குழாய்கள் அமைத்தல் பணிகளும், இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளின் கீழ் நீர்ஆதாரத்தை பெருக்குவதற்காக கசிவுநீர்குட்டைகள், பெரியதடுப்பணைகள்,

நடுத்தர தடுப்பணைகள், சிறிய தடுப்பணைகள், ஏரி தூர்வாருதல், கிராமகுட்டைகள், Recharge Shaft மற்றும் நீர் அமில்வுக்குட்டைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. வாழ்வாதார மேம்பாட்டுப் பணிகளின் கீழ் சுய உதவிகுழுக்களுக்கு சுழல் நிதிகளும் நிலமற்றோர்க்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல், ஆடு வளர்ப்பு, புறக்கடை கோழி வளர்ப்பு திட்டங்களின் கீழ் இடுபொருட்கள் வழங்ப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலர் வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன் தொகரப்பள்ளி, கோடியூர் மற்றும் பெருகோபனப்பள்ளி

நீர்வடிப்பகுதிகளில் ரூ.50.00 இலட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதில் இயற்கைவள மேம்பாட்டு பணிகளான கசிவுநீர்குட்டை அமைத்தல் மற்றும் நீரோடைகளில் பெரியதடுப்பணைகள் கட்டுதல் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார்.

பண்ணை உற்பத்தி பணிகள் திட்டத்தின் மூலம் தொகரப்பள்ளி நீர்வடிப்பகுதியில் தார்பாய்கள் மற்றும் விசைத்தெளிப்பான்களை பயனாளிகளுக்கு வழங்கினார். ஆடாளம் கிராமத்தில் மா நடவு வயலை ஆய்வு செய்தார். பின்னர் கசிவுநீர் குட்டையின் ஓரங்களில் மரக்கன்றுகள் நடவு பணியினை தொகரப்பள்ளி தலைவர் உமாலட்சுமி பிரபு அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்தார். கோடியூர் நீர்வடிப்பகுதியில் பஞ்சாயத்து தலைவர் சுமதி சண்முகம் மற்றும் சுய உதவிக்குழுக்களிடம் வட்டியில்லா சுழல்நிதி வழங்கும் திட்டத்தின் பயன் குறித்து கலந்துரையாடினார்.

கள ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர்(ம.தி.) அறிவழகன், வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, உதவி பொறியாளர் புஷ்பநாதன், நீர்வடிப்பகுதி (பொறியாளர்) பரமானந்தம் நீர்வடிப்பகுதி (வேளாண்மை) சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story