காவல்துறையினருக்கு வெகுமதி-பரிசு சான்றிதழ்

காவல்துறையினருக்கு வெகுமதி-பரிசு சான்றிதழ்

காவல்துறையினருக்கு வெகுமதி-பரிசு சான்றிதழ் வழங்கி காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். 

காவல்துறையினருக்கு வெகுமதி-பரிசு சான்றிதழ் வழங்கி காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவுறுத்தலின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி முன்னிலையிலும் வால்பாறை காவல்துறையினர் பல்வேறு தரப்பில் விசாரணை செய்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதி சேர்ந்த கோபி என்பவரிடம் ஒரு கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.

மேலும் விசாரணையில் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ளனர் அவர்களிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக தகவல் கிடைத்த நிலையில் வால்பாறை காவல்துறையினர் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் காவல் உதவிய ஆய்வாளர் முருகானந்தன் தனிப்பிரிவு காவல் துறை மணிகண்டன் தனி படையினர் சேவியர் கார்த்தி ஆகியோர் தலைமையில் குழு அமைத்து பெருந்துறை பகுதிக்கு சென்று விசாரணை செய்ததில் அங்கு பாலசுப்பரமணி, கார்த்தி,பிரேம்குமார் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்தா டேண்டா என்ற நான்கு பேர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.மொத்தம் ஐந்து பேர்களை வால்பாறை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்ந்து ஐந்து பேர்களை கைது செய்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறை ஆய்வாளர் ஆனந்தகுமார் துணை ஆய்வாளர் முருக நாதன் தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் கார்த்திக் சேவியர் ஆகிய காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story