மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

மழையால் சேதமான நெற்பயிர்கள் 

செய்யாறு பகுதியில் தொடர் மழை அறுவடைக்கு தயாராக இருந்த 750 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

திருவண்ணமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில், தொடர் மழையின் காரணமாக அறு வடைக்கு தயாராக இருந்து வந்த சுமார் 750 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து மீண்டும் முளைக்க தொடங்கியதால், விவசாயிகள் பலர் வேதனை அடைந்து உள்ளனர்.

செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் சம்பா பருவத்தில் ஆயிரக்கணக்கான ஏக்க ரில்கோ.51, ஏடிடி.37 ஆகிய நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில், தற்போது சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவம ழையின் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் வெம்பாக்கம் வட்டத்திலும், செய்யாறு வட்டாரத்திலும் பரவலாக மழைபெய்து வருகிறது.

இவ்வாறு தொடர்ந்து பெய்து வந்த பருவ மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்த சுமார் 750 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் சில தினங்களாக மழைநீரில்மூழ்கி இருந்த நிலையில், அந்தநெற்பயிர்கள்மீண்டும் முளைக்க தொடங்கியுள்ள தால் விவசாயிகள்வேதனையில் இருந்து வருகின்றனர். செய்யாறு வட்டத்தில் காழியூர், வடங்கம்பட்டு, வேளியநல்லூர்,பல்லி,முக் கூர், பாராசூர், கொருக்கை ஆகிய கிராமங்களில் சுமார் 225 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்து நெற்பயிர்களும், வெம்பாக்கம் வட்டத்தில் வெங்களத்தூர், வெம்பாக் கம், குத்தனூர், பெரும்புலி மேடு, அழிவிடைதாங்கி, வடமணப்பாக்கம், தண்டப் பந்தாங்கல், பூதேரிபுல்லவாக்கம் ஆகிய கிராமங்களில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெற் பயிர்கள், மழைநீரில் நனைந்து மீண்டும் முளைக்கத் தொடங்கி சேதம் அடைந்து உள்ளன.

விதைப்பு முதல் அறுவடை வரையில் ஒரு ஏக்க ருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரையில் செலவு செய்த நிலையில்,அறுவடை செய்ய தயார் நிலையில்இருந்த நெற்பயிர்கள் மழையால் நனைந்து மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளதால், அறுவடைசெய்தாலும் முளைத்த நெல்லை வியாபாரிகள் வாங்க மறுப்பதாகவும், சாதாரண காலங்களில் அறு வடை இயந்திரம்மூலம்அறு வடை செய்ய ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வாடகை கேட்டவர்கள், தற்போது நிலத்தில் தேங் கிய மழைநீரின் காரணமாக ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வாடகை கேட்பதால் செய்வது அறியாமல், பயிரிடப்பட்ட நிலத்திலேயே மீண்டும் நெல் பயிர்களைஅழிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக விவசாயிகள் பலர் கண்ணீர் மல்க வேதனையாக தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story