காஞ்சியில் நெல் அறுவடை தீவிரம்
ஒரு வாரமாக கிளார், முசரவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஒரு வாரமாக கிளார், முசரவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், ஆறு, ஏரி மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொர்ணவாரி, சம்பா, பின் சம்பா, நவரை உள்ளிட்ட பருவங்களில் ஏ.டி.டீ., - 36, ஐ.ஆர்., - 50, ஐ.ஆர் - 20, கோ - 43, 45, கோ - 51, குண்டு, வெள்ளை பொன்னி உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் வட்டாரத்தில் கிளார், முசரவாக்கம் உள்ளிட்ட பகுதியில், மூன்று மாதங்களுக்கு முன், நவரை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட ஏ.டி.டீ., - 36 , கோ - 43, குண்டு உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டன. இப்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. இந்நிலையில், ஒரு வாரமாக கிளார், முசரவாக்கம் சுற்றுவட்டார பகுதியில் நெல் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. இதில், விவசாய கூலி தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story