மதுரையில் மரம் வெட்டும் தகராறில் ரைஸ்மில் உரிமையாளர் கொலை - போலீசார் விசாரணை

மதுரையில் மரம் வெட்டும் தகராறில் ரைஸ்மில் உரிமையாளர் கொலை - போலீசார் விசாரணை

காவல்துறை விசாரணை


மதுரையில் மரம் வெட்டும் தகராறில் ரைஸ்மில் உரிமையாளர் கொலை செய்யப்பட்டார் - இது குறித்து போலீசார் தீவிர விசாரணை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கீரை துறை பகுதியை சேர்ந்த சௌந்தர் குமார் இவர் சிந்தாமணி சாலையில் ராஜமா நகரில் லாரி கமிஷன் அலுவலகம் நடத்தி வந்துள்ளார் இந்நிலையில் மதியம் தனது அலுவலகத்தில் சௌந்தர குமார் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது மதியம் தனது அலுவலகத்தில் சௌந்தர குமார் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சௌந்தரகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரை துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர் பின்னர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்த கீரை துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில் கொலை செய்யப்பட்ட சௌந்தர் குமார் அந்த பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்ததோடு சில மாதங்களுக்கு முன்பு லாரி கமிஷன் அலுவலகம் தொடங்கி தொழில் செய்து வந்துள்ளார் இதற்கிடையே அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் கருவேல மரம் வெட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம் என்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story