இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்: 2727 நபர்கள் விண்ணப்பம்
மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைகாக 2727 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். .
விருதுநகரில் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கைகாக 2727 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் . விருதுநகர் மாவட்டத்தில் நர்சரி, பிரைமரி பள்ளிகள் 86, மெட்ரிக் பள்ளிகள் 84 உள்ளன.இப்பள்ளிகளில் 1747 இடங்கள் ஆர்டிஇ ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 10 நாட்களாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
2727 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு இருப்பதாகவும் இதுவரை 2685 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.29 விண்ணப்பங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சரியான ஆணவங்கள் இல்லாத விண்ணப்பங்கள் குறித்து உரிய நபர்களுக்கு தெரிவிக்கப்படும்.விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கூடுதல் விண்ணப்பம் வரப்பெற்ற இடங்களுக்கு சம்மந்தப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த முன்னேற்பாடு செய்யப்பட உள்ளது.