காஞ்சியில் சாலையில் ஆறாக பாயும் கழிவுநீர்

காஞ்சியில் சாலையில் ஆறாக பாயும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்

காஞ்சியில் கழிவுநீரை வெளியேற்றும் தனியார் ஹோட்டல்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா என, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 40 வார்டுகளில், 1,975 முதல் பாதாள சாக்கடை திட்டம் அமலில் உள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட ஓரிக்கை, செவிலிமேடு, திருக்காலிமேடு போன்ற இடங்களுக்கு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, உலக வங்கி நிதியுதவி வழங்கியதால், 300 கோடி ரூபாய் மதிப்பில்,

புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. ஆனால், ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை குழாய் மற்றும் தொட்டியின் பல இடங்களில் அடைப்பு ஏற்படுவதால், பல இடங்களில் கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடுகிறது. அவ்வாறு, யதோக்தகாரி பெருமாள் கோவில் அருகே,

நேற்று முன்தினம் வெளியேறிய கழிவுநீரால் துர்நாற்றம் வீசியது. அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. வணிக ரீதியிலான நிறுவனங்கள் தொட்டி அமைத்து,

கழிவுநீரை வடிகட்டிய பிறகே வெளியேற்ற வேண்டும். ஆனால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. யதோக்தகாரி பெருமாள் கோவில் அருகே அடிக்கடி பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுவதால், 23வது வார்டுக்குட்பட்ட பல தெருக்களிலும், கழிவுநீர் வெளியேற முடியாமல் பல்வேறு சிக்கல் ஏற்படுவதாக, நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கழிவுநீரை வெளியேற்றும் தனியார் ஹோட்டல்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா என, மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story