குமரி: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

குமரி: அணைகளில் நீர்மட்டம் உயர்வு
பைல் படம்
குமரியில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 19 -ம் தேதி வரை கன மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. நாகர்கோவில், கன்னியாகுமரி மார்த்தாண்டம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்தது. குமரி மேற்கு மாவட்ட மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடி பகுதியில் 65. 04 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதனால் குமரி மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 45. 04 அடியாக இருந்தது. அணையில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் அணையில் இருந்து எந்த நேரத்திலும் மறுகால் வழியாக தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47. 02 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 137 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 21 கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சிற்றார் 1, சிற்றாறு 2 அனைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரியில் 19ஆம் தேதி வரை இந்த கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அணைப்பகுதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story