மின் ஒயர்களால் விபத்து அபாயம்
நத்தம் அருகே புன்னப்பட்டி ஊராட்சியில் உள்ளது நரசிம்மபுரம். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த கிணறுகள் அருகில் மின்வாரியம் சார்பில் புதிய மின் ஒயர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.குடிநீர் பைப் லைன் அருகே செல்லும் மின் ஒயர்களால் விபத்து வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி வேறு பகுதிக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரனிடம் புன்னப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயப்பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.
Next Story