விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம்
முகப்பு விளக்குகள் இல்லாமல் இயங்கும் அரசு பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர் மாவட்டத்தில் முகப்பு விளக்குகள் இல்லாமல் இயங்கும் அரசு பேருந்துகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

விருதுநகர் மாவட்ட மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் இரவு நேரங்களில் முகப்பு விளக்குகள் எரியாமல் இருந்தாலும் விபத்து ஏற்படும் என்பதை உணராமல் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கி வருவதாக பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் உடனடியாக இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் முகப்பு விளக்குகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்த பின்னர் பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்ட மண்டல போக்குவரத்து கழகங்களில் இருந்து விருதுநகர் சிவகாசி சாத்தூர் ராஜபாளையம் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தி

னசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலான அரசு பேருந்துகளில் இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் முகப்பு விளக்குகள் சரியாக எரிவதில்லை என்றும் அடிக்கடி பழுதாகின்றன. பேருந்துகளில் இரவு நேரங்களில் முகப்பு விளக்குகள் எரியாமல் இருந்தாலும் பேருந்து ஓட்டுநர்கள் அஜாக்கிரதையாக பேருந்தை இயக்குகின்றன.

அந்த வகையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று முகப்பு மின்விளக்கு பழுதாகி நின்றது. உடனடியாக அவ்வழியாக விருதுநகர் நோக்கி சென்ற மற்றொரு அரசு பேருந்தின் பின்னால் முகப்பு விளக்கு ஏதும் இன்றி விபத்து ஏற்படும் என்பதை உணராமல் பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனர் மற்றொரு பேருந்தில் ஏற்றி விடாமல் பயணிகளை அதே பேருந்தில் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். பேருந்து பயணிகள் பெரும் அச்சத்துடனே பேருந்தில் பயணித்தனர்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட மண்டல போக்குவரத்து கழக போக்குவரத்து கழக மேலாளர் சில நேரங்களில் பேருந்து முகப்பு விளக்குகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென்று எரியாமல் பியூஸ் போனதால் இருந்திருக்கலாம். மேலும் முகப்பு விளக்குகள் பழுதான பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுவதில்லை என புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலர் காளிதாஸ், இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முகப்பு விளக்குகள் எரியாமல் இருப்பதால் பேருந்தை இயக்குவதன் மூலம் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அப்படி விபத்து ஏற்பட்டால் விபத்துக்கு யார் பொறுப்பு இருப்பது.

பேருந்துகளை இயக்குவதற்கு முன்பாக முகப்பு விளக்குகள் ஹெட்லைட் சரியாக இயங்குகிறதா என சரி பார்த்த பின்னர் வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் மாதத்திற்கு ஒருமுறை பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story