விதிமீறல் வாகனங்களால் விபத்து அபாயம்

விதிமீறல் வாகனங்களால் விபத்து அபாயம்

போக்குவரத்து விதி மீறல் 

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசார் இல்லாத நேரங்களில், சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, விதிகளை மீறி கடந்து செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி, நெல்லுக்கார தெரு, காமராஜர் தெரு, மூங்கில் மண்டபம், காந்திரோடு ஆகிய பிரதான சாலைகளின் நடுவே, இரும்பிலான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், முக்கிய இடங்களில் மட்டும் பாதசாரிகள் கடந்து செல்ல தடுப்பு கம்பி இடைவெளி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வரிசையில், மஞ்சள் நதி நீர் கால்வாய், பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப் பள்ளி, தாலுகா அலுவலகம், நீதிமன்றங்களுக்கு செல்லும் சாலையில், மக்கள் சாலையை கடந்து செல்வதற்கு, இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் விதி மீறி செல்கின்றனர்.

குறிப்பாக, மஞ்சள் நதி நீர் கால்வாய் அருகே, போக்குவரத்து போலீசார் இல்லாத நேரங்களில், சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, விதிகளை மீறி கடந்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில், இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, சிறிய ரக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். எனவே, காஞ்சிபுரம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story