சாலை அரிப்பால் விபத்து அபாயம்

சாலை அரிப்பால் விபத்து அபாயம்

தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுகத்திற்கு செல்லும் தெற்கு கடற்கரை சாலையில் அரிப்பு ஏறுப்ட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுகத்திற்கு செல்லும் தெற்கு கடற்கரை சாலையில் அரிப்பு ஏறுப்ட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் வ.உ.சி. துறைமுகத்திற்கு செல்லும் தெற்கு கடற்கரை சாலையில் அரிப்பு ஏறுப்ட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.. தூத்துக்குடி ரோச் பூங்காவிலிருந்து தெற்கே போகும் கடற்கரை சாலை மறுமுனையில் வ.உ.சி. துறைமுகத்தின் பிரதான சாலையான வ.உ.சி. சாலையோடு தெற்கில் இணைகிறது. இச்சாலையில்தான் துறைமுக தலைவர், அதிகாரிகள், துறைமுக ஊழியர்கள், தனியார் கப்பல் கம்பெனி ஊழியர்கள், துறைமுக மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் எனப்பலரும் பயணிக்கின்றனர். இந்த சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பெரு மழையினால் சாலையிலும், பாதசாரிகள் நடக்கும் பகுதியிலும் பெருமளவில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால் சாலையை சீரமைக்க வஉசி துறைமுகசபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story