காஞ்சிபுரத்தில் லாரிகளால் விபத்து அபாயம்

காஞ்சிபுரத்தில் லாரிகளால் விபத்து அபாயம்

காஞ்சிபுரத்தில் லாரிகளால் விபத்து அபாயம்


காஞ்சிபுரம் வையாவூர் செல்லும் சாலையில்,பழைய இரயில்வே நிலையம் உள்ளது. இந்த இரயில்வே நிலையத்தில் சரக்கு முனையமும் செயல்பட்டு வருகிறது.மேலும் இந்த சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையின் புறவழிச்சாலையாக செயல்படுவதால் போக்குவரத்துக்கு எளிதாக உள்ளதாலும் அதிக அளவில் இந்த சாலையில் வாகனங்கள் தற்போது சென்று வருகிறது. மேலும் இந்த சாலையில் தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது மற்றும் நகரின் புறநகர் வளர்ச்சி பகுதியாகும் இந்த சாலை போட்டி அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த சரக்கு முனையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்பொழுது வரும் சரக்கு இரயில் முனையத்திற்கு வந்து நிற்கும்,அப்போது சரக்கு இரயில்களில் இருந்து சரக்குகள் லாரிகள் மூலம் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும். இந்நிலையில் சரக்கு ரயில் மூலம் வரும் சரக்குகளை பல்வேறு பகுதிகளில் ஏற்றி செல்ல ஏராளமான லாரிகள் ஒரே நேரத்தில் வர வழைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

லாரிகள் சாலையின் இரு புறமும் நிறுத்தப்படுவதால் அவ்வழியாக பள்ளி, கல்லூரிக்கு, அலுவலகத்திற்கு செல்ல கூடியவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.சாலையில் நிறுத்தப்படும் லாரிகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாவண்ணம் வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story