சாலையோரம் நிற்கும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

X
சாலையோரம் நிற்கும் வாகனங்கள்
மதுராந்தகம் அருகே சாலையோரம் நிற்கும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கன்டெனர் லாரி ஓட்டுனர்கள் சாலை ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு காலை நேரத்தில் சாலை ஓரத்தில் உள்ள உணவு கடைகளுக்கு ஓட்டுநர்கள் சாப்பிடுவதற்காக செல்கின்றனர். 4 நாட்களுக்கு முன்பு சிறுநாகலூர் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது தனியார் பேருந்து உரசியதால் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில் மதுராந்தகம் போக்குவரத்து போலீசார் சாலை ஓரத்தில் நிற்கும் லாரிகளை அபராதம் விதித்து லாரி ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Next Story
