திருமழிசை: தொற்று நோய் பரவும் அபாயம்

திருமழிசை: தொற்று நோய் பரவும் அபாயம்

சாலையோரம் குவியும் குப்பை

திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலை பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, திருமழிசை பேரூராட்சி. இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி பேருந்து என, 75,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில், வெள்ளவேடு புறக்காவல் நிலையம் எதிரே நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

அதேபோல, இந்த நெடுஞ்சாலையோரம் பல இடங்களில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பையால் ஏற்படும் துர்நாற்றத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story