தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையினால் நோய் பரவும் அபாயம்

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையினால் நோய் பரவும் அபாயம்

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பூதிப்புரம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகையினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பூதிப்புரம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

தேனி அருகே தேனி பூதிப்புரம் சாலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு பூதிப்புரம் பகுதியில் உள்ள பீரோ கம்பெனி தெருவினை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர் .

இந்த மனுவில் மேற்கண்ட விலாசத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அதே பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான (தொழிற்சாலை) ரைஸ் மில் செயல்பட்டு வருவதாகவும் இந்த ரைஸ் மில்லானது கடந்த 10 வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது என்றும் ,தற்பொழுது இந்த பகுதியில் ரைஸ் மில் இருப்பதினால் மாசடைந்து வருகிறது என்றும் மனு அளித்தனர்.

மேலும் இந்த ரைஸ்மில்லானது கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டு வந்துள்ளதாகவும் ,இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும்உமி சாம்பல் ஆகியவை வெளியேறி சுற்றுபுறங்கள் அதிக அளவு பாதிப்படைய வைக்கிறது என்றும் ,இந்த காற்றினை சுவாசிக்கும் பொழுது குழந்தைகள் முதல் அனைவருக்கும் சுவாச பிரச்சனை ஏற்பட்டு நோய் பிரச்சினையும் ஏற்பட்டு வருகிறது என்றும் இது குறித்து தொழிற்சாலை நிர்வாகிகளிடம் பேசியதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதே போல் தேனியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மனு அளிக்கப்பட்டது என்றும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்றும் தற்பொழுதும் இந்த மனு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு பொருட்களினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் இந்த தொழிற்சாலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்

Tags

Next Story