"நெடுஞ்சாலை ஓரம் குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்"

நெடுஞ்சாலை ஓரம் குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்

குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுகிறது

உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் - நெற்குன்றம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்துக்குட்பட்ட ஆயகொளத்துார் பகுதி. இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் அரசு பள்ளி அருகே குப்பை, மாட்டுச் சாணம் மலை போல குவிந்து கிடக்கிறது. இதனால் ஏற்படும் துார்நாற்றத்தால் வாகனங்களில் செல்வோர், பகுதிவாசிகள் மற்றும் பள்ளிக்கு மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த குப்பை, மாட்டுச் சாணத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வாகன ஓட்டி கள் மற்றும் பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலை ஒரம் தேங்கும் குப்பையை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story