குரங்கணி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

தொடர் மழை காரணமாக குரங்கணி அருவி கொட்டக்குடி ஆறு நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடிநாயக்கனூர் குரங்கணி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குரங்கணி அருவி கொட்டக்குடி ஆறு நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம். தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஆற்றுப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள அருவி நீரோடைப் பகுதிகளுக்கு செல்ல வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். குரங்கணி அருவி நீரோட்டையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணைபிள்ளையார் நீர்வீழ்ச்சியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து திருப்பிஅனுப்பி வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குரங்கணி முட்டம், டாப் ஸ்டேஷன் சென்ட்ரல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது . இதனால் குரங்கணி அருவி நீரோடை பகுதி மற்றும் கொட்டகுடி ஆற்றில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் வனத்துறையினர் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். குரங்கணி அருவி நீரோடைப் பகுதியில் மற்றும் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் தடுப்பணையில் சென்று சுற்றுலாப் பயணிகள் குளிக்கச் சென்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் போடி நகர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களை அணைப் பிள்ளையார் தடுப்பணை பகுதிக்குள் செல்ல விடாமல் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் எந்த நேரமும் அணி பிள்ளையார் நீர்வீழ்ச்சி தடுப்பணையில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் பொதுமக்கள் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது

Tags

Next Story