சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்

சாலையில் தேங்கிய மழைநீர் 

சிவகங்கை அருகே டி. புதூர் கிராமத்தில் உள்ள திருப்பதி நகரில் சிமெண்ட் சாலையாக இருந்ததை பேவர்பிளாக் சாலையாக அமைத்து தருவதாக கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சாலையின் இருபுறமும் ஒரு அடி உயரத்தில் கான்கிரீட் தடுப்புச்சுவர் எழுப்பியதோடு சென்று விட்டதால், தற்போது தொடர் மழையால், சாலையின் நடுவே மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து தங்களது வாகனங்களை வெளியேயும், உள்ளேயும் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடமும், அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை சாலை பணியினை நிறைவு செய்து கொடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர் என்று அப்பகுதியில் உள்ள மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சாலையின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்பு சுவற்றை அகற்றிவிட்டு பழைய நிலையிலான சாலையாவது பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story