வறட்சியால் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

வறட்சியால் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

நெற்பயிர் 

சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஆறு, ஏரி, கிணற்று பாசனங்கள் என 3 போக சாகுபடியை விவசாயிகள் செய்து வந்தனர். கடந்த ஆண்டு சங்கராபுரம் பகுதியில் போதிய மழை இல்லாததால் பாதியளவே நிரம்பியிருந்த ஏரிகள் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வெயில் காரணமாக வறண்டன. சங்கராபுரம் தாலுகாவில் பூட்டை, ஊராங்கானி, பாண்டலம், சிட்டந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களில் 500 ஏக்கர் வரை தண்ணீறின்றி காய்ந்து கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Tags

Next Story