திட்டச்சேரியில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

திட்டச்சேரியில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

சுற்றித் திரியும் பன்றிகள்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த கோரிக்கை நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றி திரியும் பன்றிகள் நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட தைக்கால்தெரு,பச்சான் தோப்பு , காந்திசாலை,ஆண்டவர் நகர்,வடக்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் வீடுகளில் புகுந்து பொருட்களை நாசம் செய்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளாலும்,சுற்றித்திரியும் பன்றிகளாலும் அப்பகுதியில் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டுள்ளது.இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நடவடிக்கை இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும்,

இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story