சாலை மறியல் போராட்டம்

சாலை மறியல் போராட்டம்

மோகூரில் குழாய் உடைப்பை சரி செய்யாமல், குடிநீர் வழங்குவதில் அலட்சியம் காட்டும் ஊராட்சி தலைவரின் மெத்தனப்போக்கை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மோகூரில் குழாய் உடைப்பை சரி செய்யாமல், குடிநீர் வழங்குவதில் அலட்சியம் காட்டும் ஊராட்சி தலைவரின் மெத்தனப்போக்கை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மோகூர் ஊராட்சியில் காலனி பகுதியில், நேற்று முன்தினம் முதல் குழாய் உடைப்பை சரி செய்யாமல், குடிநீர் வழங்குவதில் அலட்சியம் காட்டும் ஊராட்சி தலைவரின் மெத்தனப்போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் நேற்று காலை 8:45 மணியளவில் காலி குடங்களுடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, 9:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Tags

Next Story