தனியார் காகித ஆலையை கண்டித்து சாலை மறியல்

தனியார் காகித ஆலையை கண்டித்து சாலை மறியல்

சாலை மறியல்


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த காகித ஆலையில் புகைபோக்கி வழியாக வெளியேறும் கரி, தூசி புகையின் காரணமாக, சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், பொது மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அலர்ஜி, உடல்நல குறைவு உள்ளிட்ட பாதிப்புகளும், மேலும் குடிக்கும் குடிநீரிலும் உண்ணும் உணவிலும் கரி, தூசி கழிவுகள் கலப்பதால் அப்பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இன்று காலை வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு கரி,தூசி தனியார் காகித ஆலை புகை போக்கி வழியாக வெளியேறியுள்ளது. இதனால் கோபமடைந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஓடப்பள்ளி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பொது மக்களின் திடீர் போராட்டத்தை அடுத்து தனியார் காகித ஆலை நிர்வாக அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பல முறை புகார்கள் கூறப்பட்டும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காகித ஆலை நிர்வாகிகளிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சுகுமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து கரி,தூசி வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

Tags

Next Story