சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!
சாலை மறியல்
கல்குவாரிகளால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே முறையான அனுமதி இன்றியும், விதிகளை மீறியும் இயங்கி வரும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் மறியலை கைவிடுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story