அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்.

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்.
கோவை:சரவணம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி முறையாக செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.மேலும் பள்ளியின் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் இதனால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்தவுடன் மாணவ,மாணவியர்கள் பெற்றோர்களும் சரவணம்பட்டி பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.அடிப்படை வசதிகளை செய்து தர ஆசிரியர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய அதிகாரிகளின் கவனத்திக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.மறியல் போராட்டம் காரணமாக சரவணம்பட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story