அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சாலை மறியல் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை ஊராட்சி பகுதியில் உள்ள மாதா நகர்,எம்பிஎஸ் காலனி, தாமரை நகர்,மாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிகளில் சாலை வசதி,குடிநீர் வசதி, சுகாதார வளாகம் வசதி, தெருவிளக்கு வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் மழை நேரங்களில் நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவி பல இன்னல்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாவதாகவும் இதுகுறித்து பலமுறை திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீனா கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதிமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் கலைந்து சென்றனர். மேலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என விடியா திமுக அரசுக்கு அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story