அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி சாலை மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிக்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிக்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முள்ளிகுளம் ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிக்குளம் ஊராட்சி வடக்கு தெருவில் 100க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்கு வழி இல்லாததால் தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மல்லி காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முறையிட்டனர். போலீஸார் உரிய பதிலளிக்காததால், மல்லி காவல் நிலையம் முன் சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story