நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்றும் குடிநீர் கேட்டு சாலை மறியல்

நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்றும் குடிநீர் கேட்டு சாலை மறியல்

தரங்கம்பாடி அருகே குமாரகுடியில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்து தராதத்தை கண்டித்து தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். 

தரங்கம்பாடி அருகே குமாரகுடியில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்து தராதத்தை கண்டித்து தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தரங்கம்பாடி தாலுகா குமாரக்குடி தெற்குதெரு, வடக்குதெரு, உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து இன்று நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக சரி செய்து தரப்படும் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை விளக்கிக் கொண்டு வாக்களிக்க சென்றனர்

Tags

Next Story