மேட்டூர் அணையில் நீர் திறக்க கோரி சாலை மறியல்

மேட்டூர் அணையில் நீர் திறக்க கோரி சாலை மறியல்

சாலை மறியல் 

கருகும் தாளடி பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் , குறுவை பயிர் பாதிப்புக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கீழையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கருகும் தாளடி பயிரை பாதுகாத்திட மேட்டூர் அணையை உடன் திறந்திட கோரியும், குறுவை பயிர் பாதிப்புக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூர் கடைத் தெருவில் சாலையில் நின்று பேருந்தை மறித்து கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் ஹாஜாஅலாவுதின், ஒன்றிய பொருளாளர் பர்னபாஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் கீழ்வேளூர் வட்டாட்சியர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இன்னும் ஒரு வாரத்தில் தண்ணீர் வழங்க ஏற்பாடு நடைபெறுவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் குறுவை நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டத்தை விலக்கிக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story