ராஜபாளையம் அருகே சாலை வசதி கோரி சாலை மறியல்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 42 வது வார்டுக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் நெசவாளர் காலனி பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . கடந்த 40 ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல பாதை இல்லை எனவும்,
பாதை வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர்., மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று அப்பகுதியில் உடல்நல குறைவால் ஒருவர் இறந்த நிலையில் அவர் உடலை எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு செல்லும் பாதையில் மழை பெய்து முள் மற்றும் சகதியாக இருப்பதால் இறந்தவர் உடலை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் . ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இராஜபாளையத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் சாலை மற்றும் RR நகர் பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிம் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி மற்றும் ஆய்வாளர் சார்லஸ் பேச்சுவார்த்தை நடத்தி தற்சமயம் அவர்களை சாலை மறியலை கைவிடச் சொல்லி சாலை ஓரமாக அமர செய்தனர்.
வட்டாட்சியர் ராமச்சந்திரன் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ப்ரித்தி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வட்டாச்சியர் ராமச்சந்திரன் சுடுகாட்டிற்க்கு பாதை வசதி ஏற்பாடு செய்து தருகிறேன் என உறுதி அளித்தபின் சாலை மறியல் போராட்டத்த்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.